உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில குறிப்புக்கள்

 உடல் சூட்டைக் குறைக்க உதவும் சில குறிப்புக்கள் 

# உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு பல்வேறுபட்ட காரணிகள் உள்ளன. அதில் முக்கியமானது உடலைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் வெப்பம்.

# எப்போதும் நெருப்பில் இருப்பது போல உணர்வதோடு, வயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் என்று பலவற்றையும் சந்திக்கக்கூடும். 

# ஆனால் இந்த உடல் சூட்டை குறைக்க இயற்கை வைத்தியம் உள்ளன. அவற்றை தினமும் பின்பற்றினால், உடல் சூட்டில் இருந்து விடுபடலாம். 

# அதை கீழுள்ள பதிவில் காண்போம் 👇👇👇

https://nutrifoodtech.blogspot.com/2021/06/blog-post_25.html

மாதுளை ஜூஸ் 

✔தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸில் 2-3 துளிகள் பாதாம் எண்ணெய் சேர்ந்து கலந்து குடித்து வர வேண்டும். 

இதனால் உடலிலுள்ள வெப்பம் குறைவதைக் காணலாம்.

தண்ணீர்

ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த நீரை நிரப்பி, அதில் கால்களை வைக்க வேண்டும், தினமும் சிறிது நேரம் இப்படி செய்து வர உடலிலுள்ள அதிகமாக வெப்பம் வெளியேறும்.

✔ மேலும் குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.

எள்

 உடலின் வெப்ப நிலையாக இருக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபில் ஸ்பூன் அளவு எள்ளை சாாப்பிட வேண்டும்.

✔ அளவுக்கதிகமாக சாப்பிட கூடாது.

✔ மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது.

வெந்தயம் 

✔அதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை 1 ஸ்பூன் எடுத்துக் கொண்டு வாயில் போட்டு, தண்ணீர் குடித்து விழுங்க வேண்டும்.

✔ குளிர் காலத்தில் இதை தவிர்க்களாம்.

பால் மற்றும் தேன்

பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலம் உடல்  வெப்பம் குறைவதைக் காணலாம்.

சந்தனம்

சந்தனப் பொடியை நீர் அல்லது குளிர்ந்த பாலில் கலந்து பேஸ்ட் செய்து, நெற்றி மற்றும் தாடையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால் உடல் குளிர்ச்சியடையும், சந்தன பொடியுடன் ரோஸ் வாட்டர் கலந்தும் பயன்படுத்தலாம்.

வெண்ணெய் மற்றும் பால்

ஒரு டம்ளர் பாலில் 2 ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து தினமும் குடித்து வரலாம்.

✔ அதிகம் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம். 

வைட்டமின் சி

வைட்டமின் சி  நிறைத்து  உள்ள உணவு  பொருட்களை  உண்ணலாம். ஆரஞ்சு, எலுமிச்சை  போன்றவை. 

✔ மோர் உடல் வெப்பத்தை குறைக்கும்

✔ இளநீர், கோடையில் 2 இளநீரை பருகலாம்

புதினா டி

புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வர சூடு தணியும்.

சோம்பு நீர்

ஒரு கையளவு சோம்பை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரை வடிகட்டி, தினமும் காலையில் குடித்து வர சூடு  தணியும். 

கற்றாழை ஜூஸ்

கற்றாழையின் ஜெல்லை தினமும் முகத்தில் 20 நிமிடம் ஊற வைத்து கழுவி வந்தால் உடலைக் குளுமைப்படுத்துவதை உணர முடியும்

✔ 2 ஸ்பூன் கற்றாழையின் ஜெல்லை சிறிது தேன் , தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து குடிக்கலாம்.

 கரும்பு ஜூஸ் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும், சூடு  தணியும்

✔  Leave a 👍if this helped
Please share it, if you found it valuable. 


Comments

Popular posts from this blog

DIETITIAN INTERNSHIP MODEL REPORT

பாரதியார் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2022

எண்ணைய் பசை சருமம் உடையவர்களாக நீங்கள் இதோ உங்களுக்கான உணவு முறை