எண்ணைய் பசை சருமம் உடையவர்களாக நீங்கள் இதோ உங்களுக்கான உணவு முறை
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களுக்கான உணவு முறை...
✔ஆம் உண்மை தான், சரும வகைகளிலேயே எண்ணெய் பசை சருமத்திற்கு எராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
✔ அதில் குறிப்பாக முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளால் தான் அதிகமாக கஷ்டப்பட வேண்டிவரும்.
✔ நீங்கள் உண்ணும் உணவை கவனத்துடன் இருக்க வேண்டும்.
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சாப்பிடக்கூடாதவை
❌கொழுப்புமிக்க இறைச்சிகள்
# மாட்டிறைச்சி, செம்மறி ஆடு இறைச்சியில் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அதிகம் உள்ளது.
# இவை சருமத்தில் உள்ள எண்ணெய் பசையின் சுரப்பியை அதிகரிக்க செய்யும்.
❌பால் பொருட்கள்
# பால் உடல் நலத்திற்கு இன்றியமையாத பொருள் தான்.
# எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் பால் பொருட்களை அதிகம் எடுத்தால், எண்ணெய் பசையின் சுரப்பியை அதிகரிக்க செய்யும் இன்னும் பருக்கள் அதிகம் வர வழிவகுக்கும்.
❌ சர்க்கரை
# சர்க்கரை சருமத்தின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க செய்யும்.
# அதிகம் சர்க்கரையை தவிர்க்கலாம்.
❌ உப்புமிக்க உணவு
# உப்புமிக்க உருளைக்கிழங்கு சிப்ஸ், பிஸ்கட் போன்றவை குறைத்து கொள்ளலாம்.
❌ எண்ணெயில் பொரித்த உணவுகளை குறைத்து உண்ணவும்.
எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் சாப்பிட வேண்டியவை
✔ நார்ச்சத்துள்ள உணவுகள்
# நார்ச்சத்துள்ள உணவுகள் உடலில் டாக்ஸின்களை வெளியேற்றி , அத்தியாவசிய சத்துகளை உறிஞ்ச உதவும், நீண்ட நேர பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பும்,
# பருப்பு வகை, ஓட்ஸ், சிட்ரஸ் பழங்கள், சோளம், கைக்குத்தல் அரிசியை உண்ணலாம்.
✔வெள்ளரிக்காய்
# ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள் அதிகமாக உள்ளன.
# சருமத்தை பொலிவுடன் வைத்து கொள்ள உதவும். பச்சையாக தினமும் சாப்பிடலம்.
✔ தண்ணீர்
# எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் முக்கியமாக குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.
✔ ஒமேகா 3 ஃபேட்டி அமிலம்
#மீன், சோயா பீன்ஸ், ஆளி விதை, காலிஃப்ளவர்,பாதாம், வெண்ணெய் போன்ற உணவை உண்ணலாம்.
✔ கிரேப் ஃப்ரட்
நார்ச்சத்தும், நீர்ச்சத்துள்ளன, கலோரிகள் குறைவாக உள்ளன, இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளன, உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்
ஜுஸ் போட்டு சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும்.
Leave a👍if this helped
Please share it, If you found it valuable
Follow me @ https://nutrifoodtech.blogspot.com
Comments