டீ குடிப்பதால் உடல்நலன் பாதிக்கப்படுமா? ஆய்வு சுட்டிக்காட்டும் உண்மை என்ன?
டீயில் காணப்படும் பல இயற்கை சேர்மங்களில், தியோபிலின் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு ரிஃப்ரெஷிங் பானம் என்றால் அது டீ தான். சிலருக்கு காபி என்றால் மிகவும் பிடிக்கும். இருப்பினும், டீ (தேநீர்) உண்மையில் உலகம் முழுவதும் பரவலாக நுகரப்படும் ஒரு மலிவு விலை பானமாகும். டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளின் விரிவான பட்டியலை பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இதில் வீக்கம் குறைத்தல், இதய நோய் மற்றும் நாட்பட்ட நோய்களை கட்டுப்படுத்துதல், இரத்த சர்க்கரை அளவுகளை பராமரிப்பது உட்பட பல நன்மைகள் அடங்கும். டீ மனதை ஆறுதல் படுத்துவதற்கும் மற்றும் குணப்படுத்துவதற்கான ஒரு பிரபலமான தேர்வாக இருந்தாலும், இதன் அதிகப்படியாக நுகர்வு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. டீ குடிப்பதால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளைப் பற்றி விஞ்ஞானம் என்ன கூறுகிறது என்பதைப் இந்த பதிவில் விரிவாக காண்போம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் டீயை பொறுத்து, கஃபின் உட்கொள்ளல் மாறுபடும். பிளாக் டீ, மில்க் டீ மற்றும் கிரீன் டீ ஆகியவற்றில் சராசரியாக 14-61 மில்லிகிராம் ...